நள்ளிரவு மாரத்தான் – பெங்களூரில் டிச.14-ல் நடக்கிறது! – AanthaiReporter.Com

நள்ளிரவு மாரத்தான் – பெங்களூரில் டிச.14-ல் நடக்கிறது!

பெங்களூரு ஒயிட்பீல்டு கேடிபிஎல் பகுதியில் டிச. 14-ம் தேதி நள்ளிரவு முழு மாரத்தான், அரை மாரத்தான், 10கே மாரத்தான், மகளிர் தொடர் ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ளது.ஓட்டப்போட்டிகளுக்கு முன்னாள் தடகள வீரர் மில்காசிங் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டிகான ஏற்பாடுகளையும் டிராக் நெடுகிலும் பெரிய வீடியோ ஸ்கிரீன்களுக்கும், அலங்கார விளக்குகளுக்கும், ராக் பான்ட்களின் கச்சேரிக்கும் மற்றும் உணவுக்கும் ரோட்டரி பெங்களூரு பாரத ஸ்டேட் வங்கி போன்றவை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த போட்டியில் 12 ஆயிரம் பேர் பங்கு கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றும இதில் பங்கேற்க விரும்புவோர். http://www.midnightmarathon.in/என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துக் கொள்ளலாம் என்று மில்காசிங் தெரிவித்தார்.
nov 28 - bangaloru marathan
உலகிலேயே நள்ளிரவு மாரத்தான் ஓட்டம் பெங்களூரில் மட்டும் தான் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை ரோட்டரி சங்கம் செய்து வரும் ஏழை எளிய மக்களுக்கான கல்வி மற்றும் மருத்துவப் சேவைகளுக்காக செலவிட்டு வருகிறது. முன்னதாக இந்த சங்கம் பெங்களூரில் உள்ள 4 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்குகிறது. அத்துடன் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தாற்காலிக ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறது.

இதில் இந்த ஆண்டு 20 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட சுமார் 12 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கும் இந்த ஓட்டம், 42.195 கி.மீ ஓட்டம், 21.95 கி.மீ ஓட்டம், மகளிர்களுக்கான ஓட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர். http://www.midnightmarathon.in/என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களைப் பெறவும் இந்த இணையதளத்தை பார்க்கலாம்