நடிகவேளின் ராஜபாட்டை! நாடக விழா ஆல்பம்! – AanthaiReporter.Com

நடிகவேளின் ராஜபாட்டை! நாடக விழா ஆல்பம்!

நடிகவேளின் ராஜபாட்டை – புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து பெருமையுடன் வழங்கும், நாடகக் கலைக்கு முதன் முதலாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. நடிகவேள் ரூ.M.R.ராதா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர் நேசித்த நாடகக் கலையை மையமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப்போட்டி நடத்தி சிறந்த 3 அணிகளுக்கு தலா ஒரு லடசம்,75000 மற்றும் 50000 ரொக்கம் பரிசளித்தனர்.

மாபெரும் அளவில் நடந்த இந்த இறுதிப் போட்டிக்கு நடிகர்..பாக்யராஜ் , நடிகை. ஸ்ரீபிரியா, நடிகை.ராதிகா சரத்குமார், மற்றும் .கிரேஸி மோகன் போன்றோர் நடுவராக இருந்து சிறந்த அணியை தேர்வு செய்தனர். பிரம்மாண்டமான மேடையில் அமைந்த இந் நிகழ்ச்சியில் நடிகர்.சரத்குமார், நடிகர்.ராதாரவி, நடிகர்..ராம்கி, நடிகர்..சிவகுமார், நடிகை.சரோஜா தேவி,நடிகர்..பார்த்திபன், நடிகர்.சிவகார்த்திகேயன், இயக்குனர்.கே.ஸ்.ரவிகுமார், இயக்குனர்..விக்ரமன், நடிகை.கீர்த்தி சுரேஷ், நடிகர்..ரோபோஷங்கர் மற்றும் எண்ணற்ற சின்னத்திரை பிரபலங்கள் கல்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை பரத் மற்றும் நீலிமா ராணி தொகுத்து வழங்கினர்.விரைவில் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்..