திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது! – AanthaiReporter.Com

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது!

பாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம். திருச்சியில் உள்ள இந்நிறுவனம் ‘பெல்’ என அழைக்கப்படுகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 918 காலியிடங்களை நிரப்பு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : பிட்டரில் 330,வெல்டரில் ( G & E) 240, டர்னரில் 25, மெஷினிஸ்டில் 35, எலக்ட்ரீசியனில் 75, வயர்மேன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் தலா 20, எலக்ட்ரானிக் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ் மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கரில் தலா 15, புரொகிராம் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்டில் 50, போர்ஜர் அண்டு ஹீட் டிரீட்டரில் 10, கார்பென்டரில் 15, பிளம்பரில் 15, எம்.டி.எல்., பாதாலஜியில் 3ம் சேர்த்து மொத்தம் 918 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: ஏப்., 1, 2018 அடிப்படையில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப் பிக்கும் டிரேடு பிரிவில் என்.டி.சி., அல்லது என்.சி.டி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : மார்ச் 20, 2018.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு