தமிழ் நாட்டிற்குள் பானிபூரி விற்க வந்த பயலுக எல்லாம் தமிழர்களிடம் “இந்தி படிங்க..” என்பதா? – AanthaiReporter.Com

தமிழ் நாட்டிற்குள் பானிபூரி விற்க வந்த பயலுக எல்லாம் தமிழர்களிடம் “இந்தி படிங்க..” என்பதா?

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழர்களை மொத்தமாக முடிப்பது என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டப்படும் அணு உலைகளில் ஆரம்பித்து அத்தனை ஆபத்துகளும் தமிழகத்திற்கு தான் கொண்டு வரப்படுகிறது.இங்குள்ள அறிவாளிகளும் வளர்ச்சி வேணும்னா அணு உலைகள் வேண்டும் என்று நமக்கு வகுப்பெடுக்கிறார்கள்.இது ஒரு பக்கம் என்றால் டிவி சீரியல்கள் மூலம் வேட்டு வைக்கிறார்கள்.
vijay tv logo
முதலில் இந்தி சீரியல்களை தமிழுக்கு டப் செய்து கொடுத்து பார்த்தார்கள். இதில் விஜய் டிவிதான் முன்னிலையில் இருக்கிறது. நமக்கு தான் செவப்பா இருக்கிறவனை உடனே புடிச்சுருமே.. எதிர்ப்பு இல்லை.
சீரியலில் இந்தி திணிப்பு செய்ய ஆரம்பித்தவர்கள் இப்போது அப்படியே இந்தி படங்களை டப் செய்யாமல் இந்தியிலே போடுகிறார்கள்..

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக இந்த கூத்து நடக்கிறது. இன்று சல்மான்கானின் ஏதோ ஒரு மொக்க இந்திப்படம் ஒளிபரப்பாகிறது. அவரு தண்டவாளத்தில் மலைகளில் எல்லாம் பைக் ஓட்டி நம்மை மிரட்டுகிறார். (நல்லவேளை தமிழ் இயக்குனர்கள் இந்தளவுக்கு இன்னும் போகல..)

ஏம்ப்பா.. விஜய் டிவி நல்லவிங்களா.. என்னைக்காவது ஸ்டார் ப்ளஸ் சேனல்ல தமிழ் படத்தை அப்படியே போட்டுருக்கீங்களா..

இல்லலா.. அப்புறம் எதுக்கு தமிழன்கிட்ட மட்டும் இந்தியை திணிக்கிறீங்க..

இந்தி படம் போடக்கூடாது என்பதல்ல.. அதை குறைந்த பட்சம் தமிழுக்கு மொழி மாற்றம் செய்து போட வேண்டும். அப்படியே இந்தியில் போட்டால் அதற்கு பெயர் திணிப்பு தான்.

தமிழ் நாட்டிற்குள் பானிபூரி விற்க வந்த பயலுக எல்லாம் தமிழர்களிடம் “இந்தி படிங்க..” என்கிறார்கள்.
என்னடா நடக்குது இங்க.. frown emoticon

-கார்ட்டூனிஸ்ட் பாலா