தமிழ்நாடு அரசு ‘பட்டு வளர்ச்சித் துறையில் உதவி பட்டு ஆய்வாளர்,இளநிலை பட்டு ஆய்வாளர் பணி – AanthaiReporter.Com

தமிழ்நாடு அரசு ‘பட்டு வளர்ச்சித் துறையில் உதவி பட்டு ஆய்வாளர்,இளநிலை பட்டு ஆய்வாளர் பணி

தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் ஒன்று, ‘பட்டு வளர்ச்சித் துறை’. தற்போது இந்த துறையில் உதவி பட்டு ஆய்வாளர் மற்றும் இளநிலை பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் உதவி பட்டு ஆய்வாளர் பணிக்கு 43 இடங்களும், இளநிலை பட்டு ஆய்வாளர் பணிக்கு 257 பணியிடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
job jan 25
30 வயதுக்கு உட்பட்ட ஏனைய பிரிவினர் உதவி பட்டு ஆய்வாளர் பணிக்கு விண்ணப் பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. இளநிலை பட்டு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஏனைய பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் 32 வயதுக்கு உட்பட்டிருந்தாலும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியின வகுப்பினர் மற்றும் அனைத்துப் பிரிவு ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

தாவரவியல், விலங்கியல், வேதியியல் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவி பட்டு ஆய்வாளர் பணிக்கும், அறிவியல் பிரிவில் பள்ளியிறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் (12-ம் வகுப்பு) இளநிலை பட்டு ஆய்வாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். பட்டுவளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் அல்லது பட்டு வளர்ப்பு பயிற்சி பெற்றவர்கள், பட்டயப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கேற்ற உடற்தகுதியும் சரிபார்க்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, வாய் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இனவழி சுழற்சி ஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

www.sericultureexam.com  என்ற இணையதளம் வழியாக 27-1-16-க்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக உங்களுக்காக தனிக்கணக்கு தொடங்கிக் கொள்ள வேண்டும்.

இணைய விண்ணப்பம் சமர்ப்பித்த பின், பிரிண்ட் அவுட் நகலை தேவையான சான்றுகளுடன்

இயக்குனர்,
பட்டு வளர்ச்சித்துறை,
நேதாஜி நகர்,
அஸ்தம்பட்டி,
சேலம் 636007
என்ற முகவரிக்கு 28-1-16-க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்