தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸாகி இருக்குதுங்கோ! – AanthaiReporter.Com

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸாகி இருக்குதுங்கோ!

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டம் முழுதும் மாவட்ட ஆட்சியர்களால் அந்தந்த மாவட்ட வாக்காளர்கள், தொகுதி பற்றிய விபரங்கள் இன்று (அக்.3-ம் தேதி) வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதுமான வரைவு வாக்காளர் பட்டியல், தொகுதிகளில் பெரியது சிறியது போன்ற விபரங்களை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார்.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை- 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 பேர்.

தமிழக மொத்த வாக்காளர்கள்- 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 பேர்.

இதில் ஆண் வாக்காளர்கள்- 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 பேர்.

பெண் வாக்காளர்கள்- 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேர்.

மூன்றாம் பாலினத்தவர்- 5 ஆயிரத்து 242 பேர்.

வாக்காளர்கள் விகிதம்: 75.07 (மொத்த மக்கள் தொகையில் 75% வாக்காளர்கள்)

ஆண் பெண் விகிதம் 1021.

அக்டோபர் 3 2017 வரையிலான ஆண், பெண் வாக்காளர்கள் வயது விபரம்.

18-19 வயது வாக்காளர்கள் 5 லட்சத்து 50 ஆயிரத்து 556 பேர்.

20-29 வயது வாக்காளர்கள் 1 கோடியே 22 லட்சத்து 05 ஆயிரத்து 888 பேர்.

30-39 வயது வாக்காளர்கள் 1கோடியே 41 லட்சத்து 06 ஆயிரத்து 295 பேர்.

40-49 வயது வாக்காளர்கள் 1 கோடியே 28லட்சத்து 79 ஆயிரத்து 416 பேர்.

50-59 வயது வாக்காளர்கள் 95 லட்சத்து 35 ஆயிரத்து 878 பேர்.

60-69 வயது வாக்காளர்கள் 61 லட்சத்து 47 ஆயிரத்து 636 பேர்.

70-79 வயது வாக்காளர்கள் 31 லட்சத்து 01 ஆயிரத்து 972 பேர்.

80+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 10 லட்சத்து 60 ஆயிரத்து 361 பேர்.

தமிழக மொத்த வாக்காளர்கள்- 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 002 பேர்.

தமிழகத்தில் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர் 6 லட்சத்து 24 ஆயிரம் வாக்காளர்களும், (ஆண் வாக்காளர்கள்-3 லட்சத்து 13 ஆயிரத்து 789 பேர், பெண் வாக்காளர்கள்- 3 லட்சத்து 10 ஆயிரத்து 542 பேர் மூன்றாம் பாலினத்தவர் 74 பேர்.) 6,24,405

சிறிய தொகுதி கீழ் வேலூர்– 1 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்களும் ( ஆண் வாக்காளர்கள்- 83 ஆயிரத்து 016 பேர். பெண் வாக்காளர்கள்-85 ஆயிரத்து 258 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.) உள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர் அதிகம் உள்ள தொகுதி மதுரவாயல். இங்கு 130 பேர் உள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 6 லிருந்து அக்.2 வரை 5 லட்சத்து 47 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 31 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க , நீக்க, முகவரி மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்காக அக்டோபர் 8 மற்றும் 22 ஆம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

மேலும் விபரங்களுக்கு www.nvsp.in  என்ற இணையத்திலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.