தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், யூனிஃபார்ம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவு! – AanthaiReporter.Com

தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், யூனிஃபார்ம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், பல பள்ளிகளில் புத்தகங்களை மூட்டையாக தூக்கி கொண்டு செல்லும் வகையில் அதிகளவு உபகரணங்கள் வழங்கப்படும் நிலையில். தனியார் பள்ளிகள் பெற்றோர் களிடம் குழந்தைகளுக்கான ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் போன்றவற்றை தங்களிடம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பள்ளி நிர்வாகம் பாடப் புத்தகங்களுக்கு ரூ. 5,000, சீருடை, லஞ்ச் பேக் போன்ற பொருட்களுக்கு ரூ.500 கேட்பதாகவும் இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை தனியார் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது. பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்கும்படி நிர்ப்பந்திக்க கூடாது என அறிவுறுத்தியது.

மேலும் இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.