டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்! – AanthaiReporter.Com

டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்!

விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. படத்தில் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மகத், நிவேதா, தாமஸ், சூரி, சம்பத் ராஜ், பிரதீப்ராவத் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
cine - jillaa 28
விஜய், மோகன்லால் இருவரும் பெரிய நடிகர்கள் என்பதால் டைரக்டர் நேசன் என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் தவித்தார். இதனை அறிந்த விஜய் இயக்குனரை அழைத்து மோகன்லால் பெயரை முதலில் போடும்படி கேட்டுக் கொண்டார்.

மோகன்லால் இதனை ஏற்கவில்லை. விஜய் பெயரைதான் முதலில் போட வேண்டும் என்றார். தற்போது இப்பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. விஜய் விருப்பப்படி மோகன்லால் பெயர் டைட்டிலில் முதலில் போடப்படுகிறது. இரண்டாவதாக விஜய் பெயர் இடம் பெறும்.

இதுகுறித்து டைரக்டர் நேசன்,”விஜய் என்னிடம் மோகன்லால் சீனியர் நடிகர். ரொம்ப பிரபலமானவர். எனவே அவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். எனவே டைட்டில் கார்டில் மோகன்லால் பெயரை முதலில் போடுங்கள் என்றார். ஆனால் மோகன்லால் என்னை அடுத்து தமிழ் திரையுலகில் விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அதோடு இந்த படம் தமிழில்தான் எடுக்கப்பட்டு உள்ளது. எனவே விஜய் பெயரை முதலில் போடுங்கள் என்றார்.

ஆனால் விஜய் அதை ஏற்கவில்லை. மோகன்லால் பெயர்தான் முதலில் வர வேண்டும் என்றார். அதன்படியே மோகன்லால் பெயரை முதலில் போட்டுள்ளோம்.”என்று நேசன் கூறினார்.