டெல்லி சட்டசபை தேர்தல்: 70% வாக்குப்பதிவு! – AanthaiReporter.Com

டெல்லி சட்டசபை தேர்தல்: 70% வாக்குப்பதிவு!

டெல்லி சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி வரை 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடும் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க. 66 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 69 இடங்களிலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் 27 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.மத்திய வேளாண்மை துறை மந்திரி சரத்பவாரின் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கியுள்ளது. சுயேட்சை வேட்பாளர்களாக 224 பேர் போட்டியிடுகின்றனர்.இதையும் தாண்டி விஜயகாந்த் சார்பில் பதினொரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.
nov 34 - DELHI ELECTION-
இந்த தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக, அதே சமயம் மதியம் வரை மந்தமாக நடைபெற்று, பின்னர் ஓரளவு விறுவிறுப்படைந்தது.

காலை 11 மணி வரை 17 சதவீதமும், மதியம் 1 மணி வரை 34 சதவீதமும், பிற்பகல் 3 மணி வரை வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், மாலை 5 மணி வரை சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Polling in Delhi may touch record 70%
*****************************************************
A record 70 per cent turnout is expected in Delhi, said an Election Commission official on Wednesday, attributing it to brisk voting in the last two hours at polling stations.