டி. வி. சேனல்கள் வரம்பு மீறுகின்றன – சுப்ரீம கோர்ட்டில் வழக்கு! – AanthaiReporter.Com

டி. வி. சேனல்கள் வரம்பு மீறுகின்றன – சுப்ரீம கோர்ட்டில் வழக்கு!

டிவி சேனல்களில், கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் சில நேரங்களில் பார்ப்பவர்களை தவறாக இட்டுச் செல்லும் செய்திகளும், நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட செய்திகளும் வெளியாகின்றன. அவற்றை தடுக்க ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்க வேண்டும் எனறு கோரி தாக்கலான பொது மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் விளக்கமளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
nov 30 - t v
அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்து ஜாக்ரிதி சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,”பத்திரிகைகளைக் கட்டுப்படுத்த இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதைப் போல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்த எந்த ஒரு அரசுத் துறையும் இல்லை. திரைப்படங்களைத் தணிக்கை செய்ய தணிக்கைக் குழு இருப்பதைப் போல ஒலி, ஒளி சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய எந்த அமைப்பும் இல்லை.

ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவிக்கும் இணையதளங்களை உடனடியாக தடை செய்வதைப்போல், டி.வி. நிகழ்ச்சிகளுக்கு உடனடி தடை விதிக்க மத்திய அரசிடம் போதிய சட்டம் இல்லை.இதுபோன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் டி.வி. சேனல்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசின் அலட்சியப் போக்கால் நிகழ்ச்சிகள் வரம்புகளை மீறுகின்றன. அதன் காரணமாக ஆதரவான செய்திகள் வெளியிட பணம் பெறும் நிகழ்வுகளும் (பெய்டு நியூஸ்), மிரட்டிப் பணம் பெறும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

மூட நம்பிக்கை, தவறான வழிகாட்டுதல்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அவற்றைக் கண்காணித்து முறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்திருந்தது.

இதை விசாரித்த கோர்ட் இந்த பொது நல மனு மீது பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பிரஸ் கவுன்சில், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தொலைக்காட்சி கட்டுபாட்டு தனியார் அமைப்புகள் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

SC asks Centre to frame guidelines to regulate TV contents
***********************************************************
The Supreme Court on Thursday asked three central ministries and others including Press Council of India (PCI) to respond to a PIL seeking framing of guidelines to regulate contents of television channels.