ஜெயலலிதா ஒரு பிள்ளையை பெற்று அவரை மறைத்து வைத்திருந்தார் என்பது தப்பில்லையே! – AanthaiReporter.Com

ஜெயலலிதா ஒரு பிள்ளையை பெற்று அவரை மறைத்து வைத்திருந்தார் என்பது தப்பில்லையே!

ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையை பற்றி பேசி விவாதித்து அவரை அசிங்கபடுத்தாதீர்கள் , character assasination செய்யாதீர்கள் என்று பலர் சொல்லுகின்றனர் .

என்னை பொறுத்தவரை திருமண பந்தத்திற்கு வெளியே பிள்ளை பெற்று கொள்ளுவது எந்த வித அசிங்கம் கிடையாது .அது அவர் அவர் சுய விருப்பம் .அப்படியே பெற்று கொண்டு அந்த குழந்தையை இன்னொருவருக்கு தத்து கொடுப்பதும் ஒருவரின் சொந்த விஷயம் . இந்த  விஷயங்களால் ஒருவர் அசிங்கமானவராகி விட முடியாது ,இழிவானவராகி விட முடியாது .

அந்த காரியத்தை அசிங்கமாக பார்க்கும் பொது புத்திதான் இழிவானது .

ஒருவர் மண வாழ்கைக்கு வெளியே single mom ஆக இருந்தால் அவரின் பொது வாழ்க்கைக்கு ,அரசியல் வாழ்க்கைக்கு ,தொழில்ரீதியான வாழ்க்கைக்கு இழுக்கு என்று கட்டமைப்புகளை உருவாக்கிய சமுதாயம் தான் இதற்கு அசிங்கப்பட வேண்டுமே ஒழிய பிள்ளயை பெற்று மறைத்த பெண் அல்ல .

உண்மையிலேயே ஜெயலலிதா ஒரு பிள்ளையை பெற்று அவரை மறைத்து வைத்திருந்தார் என்று வைத்துக்கொள்ளுவோம் .

அவர் எப்படி பட்ட சூழலில் இதை செய்திருப்பார் ?

தன் தாய் சந்தியா ஒரு single mom ஆக இருந்த ஒரே காரணத்திற்காக வாழ்வில் எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார் ,அதன் விளைவாக எப்படி தன் படிப்பும் கனவுகளும் தவிடுபொடியாகி போனது என்பதை நிச்சயம் நினைத்திருப்பார் .தான் பட்ட அவமானங்களும் தன் மழலை தொலைந்து போன கசப்பான அனுபவங்களும் தன் குழந்தைக்கு வர கூடாதென எண்ணி இருப்பார் .

அந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவு அவருக்கு சரியானதாகவே இருந்திருக்கும் .

இதில் அசிங்கம் எதுவுமில்லை .

1980 இன் சமூகம் இதை அசிங்கமாக பார்த்து இருக்கலாம் ஆனால் 2017 இன் சமூகம் இதை அசிங்கமாக பார்த்தது என்றால் ஒரு சமூகமாக நாம் இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம் என்பதே அர்த்தம் .

மேலும் இந்த பெண் ஜெயலலிதாவின் மகள்தான் என்கிற விஷயம் அவரின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் இந்த மாநிலத்தை நீண்ட காலம் ஆண்டவர் என்கிற முறையில் அவரின் தனிப்பட்ட வாழ்விற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பு உள்ளது .

ஆகவே அம்ருதாவின் விஷயம் ஜெயலலிதாவின் வாழ்க்கை , அதிமுகவின் உட்கட்சி குளறுபடிகள் ,33 வருடகாலமாக ஜெயலலிதாவின் வாழ்வில் சசியின் சூழ்ச்சி போன்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வாய்ப்புள்ளது.

இந்த மாநிலத்தின் அரசியல் மாற்றத்திற்கு சில உண்மைகள் தேவைப்படுகிறது.

ஆக ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கும் ,அதிமுகவின் சொத்துக்களுக்கும் ஆசைப்பட்டு இந்த விவாதத்தையும் ,DNA பரிசோதனையையும் தவிர்க்கும் அதிமுகவினர் போல் இல்லாமல் அறிவுசமூகமாகிய நாமாவது கொஞ்சம் திறந்த அறிவுடனும் பரந்த மனப்பான்மையுடனும் இந்த விஷயத்தை அணுகுவோமாக .

ஷாலின் மரிய லாரன்ஸ்