”செல்வந்தன்” குறித்து மகேஷ்பாபு! + ஆல்பம் + டிரைலர் – AanthaiReporter.Com

”செல்வந்தன்” குறித்து மகேஷ்பாபு! + ஆல்பம் + டிரைலர்

மைத்ரி மூவி மேக்கர்ஸ், M .B.எண்டர்டைன்மென்ட்ஸ் (P) ltd வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “ செல்வந்தன் “. மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தெலுங்கில் “ ஸ்ரீ மந்த்துடு “ என்ற பெயரில் மிக பிரமாண்டமான முறையில் சுமார் 70 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப் பட்ட இந்த படம் வெளியாக இருந்த நேரத்தில் பாகுபலி படத்தின் வெளியிட்டை ஒட்டி இந்த படத்தின் வெளியிட்டை மகேஷ்பாபுவே ஒத்திவைத்து ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் வெளியிட உள்ளனர்.மற்றும் ஜெகபதி பாபு, சுகன்யா, மாஸ்கோவின் காவேரி படத்தின் நாயகன் ராகுல் ரவீந்திரன், சனம் ஷெட்டி , நிகிதாஅணில், சம்பத், சுப்புராஜ், ராஜேந்திரபிரசாத், சித்தாரா, துளசி, முகேஷ் ரிஷி, பாண்டியநாடு ஹரீஷ், சனா, ஆகியோர் நடிக்கிறார்கள்.


இப் படம் குறித்து நடிகர் மகேஷ் பாபு சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “நான் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான் தமிழில் நன்றாக பேசுவேன். தெலுங்கில் பட வாய்ப்பு கிடைத்ததால் தெலுங்கு பட ஹீரோ ஆனேன். தமிழில் நடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. தெலுங்கில் நான் நடித்துள்ள படம் ‘ஸ்ரீமந்த்துடு’ இதற்கு ‘பணக்காரன்’ என்பது பொருள். எனவே தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள படத்துக்கு ‘செல்வந்தன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

இது கிராம சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ள படம். தற்போது நான் ‘பிரமோற்சவம்’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். அடுத்து தொடர்ந்து தமிழில் நடிப்பேன். தெலுங்கில் நான் நடிக்கும் போது தமிழிலும் அதே படத்தை எடுக்கலாம் என்று யோசனை கூறினார்கள். அதை நிச்சயம் செயல்படுத்துவேன்.

‘செல்வந்தன்’ படத்தை கொரட்டால சிவா இயக்கி இருக்கிறார். எனது ஜோடியாக சுருதிஹாசன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ‘பாகுபலி’ படம் வெளியான போது இந்த படமும் வெளியாக இருந்தது. அது ரூ.250 கோடி பட்ஜெட் டில் தயாரான படம். எனவே, சில வாரங்கள் அது ஓட வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தாமதமாக ரிலீஸ் செய்ய முடிவு எடுத்தோம். இனி தொடர்ந்து எனது படங்கள் தமிழில் வெளியாகும்” என்றார்.