சென்னை நகருக்கு கடல் நீரிலிருந்து குடிநீரான நெம்மேலி வாட்டர்! – AanthaiReporter.Com

சென்னை நகருக்கு கடல் நீரிலிருந்து குடிநீரான நெம்மேலி வாட்டர்!

“இந்த வருடம் சென்னையில் பருவமழை குறைவாக பெய்துள்ளது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் முழு உத்வேகத்துடன் கடல் நீரை குடி நீராக்கும் நெம்மேலி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெம்மேலி தண்ணீர் சென்னை நகருக்கு தேவையான கணிசமான குடிநீரை வழங்கும்”என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
jaya water project 23
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் தயாரிக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது திட்டமிட்டதை தாண்டி 101 சதவீதம் உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”முதல் -அமைச்சர் ஜெயலலிதா சென்னை நகர குடிநீர் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னை நகரத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அந்த திட்டம் தற்போது 101 சதவீத உற்பத்தியை எய்து சாதனை படைத்துள்ளது. குடிநீர் உற்பத்தியில் இது ஒரு புதிய அத்தியாயம் ஆகும். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் நெம்மேலியில் குடிநீர் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில்தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கான போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் சென்னையில் பருவமழை குறைவாக பெய்துள்ளது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் முழு உத்வேகத்துடன் கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெம்மேலி தண்ணீர் சென்னை நகருக்கு தேவையான கணிசமான குடிநீரை வழங்கும். “என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.