சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடிக்கும் திரைப்படம் 24 -ஆடியோ ரிலீஸ் ஆல்பம் – AanthaiReporter.Com

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடிக்கும் திரைப்படம் 24 -ஆடியோ ரிலீஸ் ஆல்பம்

யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இன்று நேற்று நாளை மாதிரியான டைம் மிஷின் பற்றிய படம். அப்போதே இயக்குனர் விக்ரம் குமார் இப்படம் பற்றி டைம் மிஷனை வைத்து நிறையப் படங்கள் வந்திருக்கிறது. இது முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். சூர்யா ஹீரோவாகவும், வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இன்றைய காலகட்டம், 25 வருடங்களுக்கு பிந்தைய காலம் என்ற இரு களங்களில் கதை நடக்கிறது. 25 வருடத்துக்கு முந்தைய காலகட்ட காட்சிகள் போலந்து நாட்டில் படமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியை மும்பையில் செட் அமைத்து படமாக்கினோம். இன்றைய கால கட்ட கதை சென்னையில் நடப்பது மாதிரி இருக்கும்” என்று கூறியிருந்தார்.

.
நேற்று நடந்த இப்பட ஆடியோ ரிலீஸ் விழாவில் சூர்யா பேசியது: ”படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்ப்பு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் உழைத்த உழைப்புக்கான பலன் இது எனலாம். வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அழகான பாதையை அமைத்து கொடுத்தது ரசிகர்கள் தான். “ சரியான படம் பண்ணின வெற்றி பெற வைங்க , தப்பான படத்தை நான் பண்ணினா கூட என்னையும் ஆதரிக்காதிங்க , அப்படி தப்பான படத்தை நீங்க ஆதரிக்காம இருந்தால் தான் நாங்கள் நல்ல கதையை தேடி பிடித்து சிறந்த படத்தில் நடிக்க முடியும் , உங்களை மகிழ்விக்கவும் முடியும்.

இயக்குநர் விக்ரம் குமார் மிகச் சிறந்த இயக்குநர் , அவர் படத்தின் கதையை நான்கு மணி நேரம் என்னிடம் கூறி முடித்ததும் நான் கை தட்டி ரசித்தேன். படத்தின் கதையை கேட்க்க வேண்டும் என்று இசைய்புயல் ஏ. ஆர். ரஹ்மானிடம் நான் கூறியதும் முதலில் அரை மணி நேரம் கதை கேட்க நேரம் ஒதுக்கிய இசை புயல் பின்னர் கதை பிடித்து போய் ஆறு மணி நேரம் கேட்டார். இப்படம் ஒரு லட்சிய படைப்பு என்று இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் கதையை விவரித்து முடித்தவுடன் என்னிடம் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பேசலாம் அவர் மிகப்பெரிய உச்சங்களை தொட்டும் எளிமையாக இருக்கிறார்.

சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டத்தை பற்றி நான் தெரிந்து கொண்டதும் நான் மிகவும் வருந்தினேன் , மனசு வலித்தது , எல்லாருக்கும் நேரம் இருக்கு , எல்லாருக்கும் நேரம் வரும். கல்லூரி படிக்கும் போது நானும் எதுவும் செய்யமால் இருந்தேன் , ஆனால் நான் இங்கு இப்படி நின்று பேசுவதற்கு காலம் தான் காரணம். இப்படத்தில் நான் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறேன்” என்றார்.