சுங்கச் சாவடி கட்டணச் சர்ச்சை: நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ன? – AanthaiReporter.Com

சுங்கச் சாவடி கட்டணச் சர்ச்சை: நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ன?

சுங்க சாவடி குறித்து அறிக்கை விடும் தி மு க, காங்கிரஸ், ம தி மு க ,பாமக, விடுதலை சிறுத்தைகள், த மா க போன்ற கட்சிகளை அகற்ற மக்கள் முன்வர வேண்டும்.
toolgate apr 3
மாநில வாரியாக உள்ள சுங்க சாவடிகள் மற்றும் மாநில வாரியாக உள்ள சாலைகளின் நீளம்.(கிலோமீட்டரில்).
ஆந்திர பிரதேசம் -29 (4537), அஸ்ஸாம் – 6(2836), பீகார் – 14 (3642), சண்டிகர் -1 (24), சட்டிஸ்கார் -9(2184),டில்லி -2 (72), குஜராத் -31(3245),ஹரியானா-9(1512), ஜம்மு – காஷ்மீர் – 3(1245),ஜார்கண்ட்- 3(1805), கர்நாடகா – 30 (4396), கேரளா – 8(1457), மத்திய பிரதேசம் – 27 (4670), மகாராஷ்டிரா – 42(4176),மேகாலயா – 2(810), ஓடிஸா – 9(3704), பஞ்சாப் – 12(1557), ராஜஸ்தான் – 40, தமிழ்நாடு – 43(4832), தெலுங்கானா – 13, உத்திரபிரதேசம் -39(6774), உத்தரகாந்த் -1, மேற்கு வங்காளம் – 13 (2578), (அடைப்பு குறியில் உள்ளவை கிலோ மீட்டர்கள்).மாநிலங்களில் போடப்பட்ட சாலைகளுக்கு ஏற்ப சுங்கசாவடிகள் அமைந்துள்ளன.

அதிக அளவிலான சாலைகள் அமைக்கப்பட்ட மாநிலங்களில் அதிக அளவிலான சுங்க சாவடிகள். இந்தியாவில், 2004க்கு முன் அதாவது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி இருந்த போது, தனியார் பங்களிப்பு குறைவாகவும், அதிக அளவில் அரசு நிதியிலேயே தங்க நாற்கர சாலைகள் போடப்பட்டன.ஆனால் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வந்தவுடனேயே 2005லிருந்து விதிகள் தளர்த்தப்பட்டு, அதிக அளவில் தனியார் பங்களிப்புடன் சாலைகள் போடப்பட்டன.

குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தனியாருடன் ஒப்பந்தகள் போடப்பட்டு அவர்களை முதலீடு செய்யவைத்தது அன்றைய அரசு. இதற்காக ஏகபோக மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைச் சட்டத்தில் பல மாற்றங்களை செய்து, தனியார்கள் அதிக லாபத்தை பெற வழிவகை செய்து ஊக்குவித்தது அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பதை உணர்தல் நலம்.இந்த நடவடிக்கைகளின் போது, தற்போது தமிழகத்தில் சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் பலர் அன்றைய மத்திய அரசில் அங்கம் வகித்தவர்கள் மற்றும் ஆதரவு அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தி மு க, பா ம க, காங்கிரஸ், பண்ருட்டி வேல் முருகன் தலைமையிலான கட்சி, த மா காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் சட்ட திருத்தங்களையும், தனியாருடைய பங்களிப்புகளையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் தனியார் பங்களிப்புடன் கூடிய சாலைகள் கட்டமைக்கப்பட்டனவோ அங்கெல்லாம் மத்திய அரசு (அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு) 20 முதல் 30 வருடங்களுக்கான ஒப்பந்தங்களை மேற் கொண் டுள்ளது என்பதையும் அந்தந்த மாநில அரசுகளே இதை ஏற்று கொண்டு நிலங்களை கையகப்படுத்தி கொடுத்த தோடு, அந்த தனியார் நிறுவனங்களின் வருவாயை வசூல் செய்வதற்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதி செய்து கொடுத்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் நலம். மாநில அரசு இது வரை இதுபற்றி கருத்துக்களை வெளியிடாது இருப்பதன் காரணம் இதுவே.

மேலும், ஒப்பந்தப்படி வசூல் செய்வதில் தடையோ அல்லது குறைகளோ இருந்தால் சம்பந்தப்பட்ட அரசுகள் இழப் பீடு வழங்க வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி.இவையெல்லாம் அன்றைக்கு அமைச்சர்களாக, பாராளு மன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த கட்சியினருக்கும், கட்சிகளுக்கும் தெரியாமல் போனதா? செய்வதை யெல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் மக்களை தூண்டி விடுவது போல் அறிக்கை விடும் அரசியல் எட்டப்பர்களை அடையாளம் கண்டு வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.

இந்த சுங்கசாவடி பிரச்சனைகளை சீர்செய்து, முறைபடுத்தி, முடிந்த வரையில் சட்டப்படி எந்தெந்த ஒப்பந்ததாரர் கள் முறை தவறி வசூல் செய்தனர் என்பதை கண்டறிந்து சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பாஜக அரசு. 100 கோடிக்கும் குறைவான சுங்கசாவடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது இந்த அரசு. மேலும் படிப்படியாக அரசு கட்டமைத்த சுங்கசாவடிகளின் தரத்தை உயர்த்தி வசதியை பெருக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பாஜக அரசு. குறிப்பிட்ட அளவிற்கும் மேலான சுமைகளை ஏற்றி செல்லும் லாரிகளாலேயே, அதிக அளவிலான சாலைகள் பழுதடைகின்றன என்பதயும், சுங்கசாவடிகளின் அருகே எடை மேடை அமைத்து விதிகளை மீறி சுமை எடுத்து செல்லும் லாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவது போன்ற எண்ணற்ற செயல்பாடுகளை கண்டித்தே, ஒரு சில அமைப்புகள் போராட்டம் என்ற பெயரில் ஒளிந்து கொள்கின்றன என்பதை அறிந்தே வைத்துள்ளது அரசு. இதற்கு துணை போகும் அரசியல் கட்சிகள் மக்கள் விரோத கட்சிகள் என்பதை மக்கள் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. மேலும் இது குறித்த பல விவரங்கள் குறித்து பதிவிடுவேன்.

நாராயணன் திருப்பதி.