சின்னத்திரை நடிகர் சங்க நியூ நிர்வாகிகள் பொறுப்பேற்பு! – ஆல்பம் – AanthaiReporter.Com

சின்னத்திரை நடிகர் சங்க நியூ நிர்வாகிகள் பொறுப்பேற்பு! – ஆல்பம்

தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கம் 2003-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் 1,340 பேர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகள் இருக்கின்றன. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தலைவராக நளினி, பொதுச்செயலாளராக பூவிலங்கு மோகன், பொருளாளராக வி.டி.தினகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு வரை இருந்தது.


இருப்பினும் சங்க நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.இதையடுத்து நடந்தத் தேர்தலில் சங்க தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவர் அணி வெற்றியடைந்தது. அவர்கள் அனைவரும் நேற்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர்