சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்! – AanthaiReporter.Com

சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்!

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க, தி மூவி ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி பேஷன் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம், நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, வித்யா, ஐஸ்வர்யா மேனன், எம்.எஸ். பாஸ்கர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும், எம்.ஜெயபிரதீப்பிடம் பேசியபோது,”இது சஸ்பென்ஸ் திரில்லர் படம். முக்கியமான ஐந்து கேரக்டர்களைச் சுற்றி நடக்கும் கதை. ஒவ்வொரு மிருகத்துக்கும் தனிப்பட்ட, நிரந்தர குணம் இருக்கிறது.ஆனால், மனிதர்களுக்கு மட்டும் நிரந்தர குணம் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப மனிதன் தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறான். இப்படி மாறுபட்ட குணம் கொண்ட ஐந்து பேர்கள் சந்திக்கும்போது நடக்கும் பரபரப்பான சம்பவங்களை படமாக்கி இருக்கிறேன்.” என்கிறார் –