சட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவில்லை! – AanthaiReporter.Com

சட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவில்லை!

திருமணத்திற்கு வெளியாயன உறவு குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் இல்லை! குடிமையியல் பிரிவில் குற்றம்!.தீர்ப்பைப் பற்றித் தெரியாமல் இந்தியாவெங்கும் இனி கள்ளக் காதல் உருவாகி விடும்னு பேசப்படுவதை என்னெவென்று சொல்வது!

திருமணத்திற்கு வெளியான உறவு என்பது தனி மனித வாழ்க்கைனு சொன்னா, எல்லோரும் உறவு வச்சிக்கோங்கன்னு அர்த்தம் இல்லை. கணவன், மனைவி விருப்பப்பட்டு, புரிதலோடு செய்யும் எதுவும் அவரவர் குடும்பம், தனி உறவு சார்ந்தது.!

மனைவியோ, கணவரோ யாரின் உறவையும் யாரின் தேர்வையும் பண்பாடு என்ற பெயரில் கட்டாயப் படுத்த முடியாது! ஒப்புதல் அளிப்பதும் மறுப்பதும் அவரவர் தேர்வு!

கணவனுக்கோ மனைவிக்கோ உடன்பாடு இல்லையெனில், அவரவர் பாதையில் விலகிச் சென்று புதிய உறவையோ, வாழ்வோ அமைத்துக்கொள்ளலாம்! இப்படித்தான் இன்றையத் தீர்ப்பைப் புரிந்துகொள்ளலாமே ஒழிய, இனி எல்லாப் பெண்களும், எல்லா ஆண்களும் உறவுக்கு வெளியே ஓடிக்கொண்டிருப்பார்கள் என்று தட்டையாக புரிந்துக்கொள்ளக்கூடாது!

ஆனால், ஒன்று புரியவில்லை. பெண்கள் குறித்த எந்த தீர்ப்பு வந்தாலும், பண்பாடு, மதம், அது, இதுன்னு ஏன் குழப்பிக்கொள்ள வேண்டும்!. பெண்கள் குறித்தத் தீர்ப்பையெல்லாமே பெண்களின் படுக்கையோடு ஏன் எட்டிப்பார்த்து ஒப்பிட வேண்டும்.

பச்சையாக சொல்ல வேண்டும் என்றால், படுப்பதும் படுக்கை அறையும் அவரவர் தனி உரிமை. அது சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தாத வரை, நம் வீட்டினுள் வராத வரை, எவரின் படுக்கை அறைக் குள்ளும் சென்று ‘பண்பாட்டு’ப் பாடம் எடுக்கத் தேவையில்லை!.

இந்தத் தீர்ப்பு வந்ததும் இன்றிலிருந்து யாரும் புதிதாக கள்ள உறவுத் தேடப்போவதில்லை. சட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவும் இல்லை. குற்றவியல் (Criminal) பிரிவில் இருந்து குடிமையியல் (civil) பிரிவில் பார்க்க வேண்டும் என சொல்கிறது. இது உலக நாடுகள் பலவற்றில் இருக்கும் நடைமுறைத்தான்.

– முனைவர் விஜய் அசோகன் in Fb

Vijay Asokan