கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே! – கருணாநிதி ஸ்டேட்மென்ட் !. – AanthaiReporter.Com

கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே! – கருணாநிதி ஸ்டேட்மென்ட் !.

“செடிகொடிகள் சாய்ந்து, காய்ந்து, மரங்களனைத்தும் பட்டுப் போய், வேலி உடைந்து, கொலைகாரர்களும், கூலிப்படையினரும், கொள்ளைக்காரர்களும் குடியேறி, பாம்புகளும், பூரான்களும், தேள்களும் நெளிந்திடும் பூங்காவை, அமைதிப் பூங்கா என்றால், நம்புவதற்கு நாமென்ன நனவிழந்து விட்டோமா?கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே” என்று கருணாநிதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
sep 26 - karunanidhi
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,:”டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை. வழக்கம் போல் மத்திய அரசை தாக்கி தயாரிக்கப்பட்ட அவரது உரையை ஒரு அமைச்சர் அங்கே வாசித்திருக்கிறார். அந்த உரையில் ‘தமிழ் நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அதனால்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக தேசிய அளவில் பேசப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறதா? முந்தாநாள் மாலையிலும் நேற்று காலையிலும் சட்டம் & ஒழுங்கு தொடர்பாக நாளேடுகளில் என்னென்ன செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை பார்ப்போம்.

நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்த டாக்டர் சுப்பையா, பில்ராத் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்ல காரில் ஏறும்போது அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொன் றது.செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஆட்டோவின் பின்னிருக்கையில் ரத்தக் காயங்க ளோடு வாலிபர் மயங்கிக் கிடந்திருக்கிறார். மருத்துவமனையில் இறந்த அவர் ஆட்டோ டிரைவர் சசிபாலன் என்று தெரிகிறது.

அதே செம்மஞ்சேரியில் கட்டிடத் தொழிலாளி வேல்முருகன் கொலை செய்யப்பட்டு முட்புதரில் சடலமாக கிடக்கிறார்.மாங்காடு அருகே தொழிலதிபரும், அதிமுக கிளை துணை செயலாளராகவுமான னு குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சேலத்தில் மூதாட்டி சரஸ்வதியை கொன்று 50 பவுன் கொள்ளை.

மதுரையில் வெங்காய வியாபாரி பாண்டி என்பவர், மாநகராட்சி திமுக கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே. குருசாமி தங்கை கணவர், வெட்டிக் கொலை.

பாரிமுனையில் பார்வையற்றவர்கள் 150 பேர் கைது.
ஜெயலலிதா சார்பில் ராமதாஸ் மீது 3 அவதூறு வழக்குகள்.
இதுவரை என் மீது 12 அவதூறு வழக்குகள்.
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்கு. அவர் துணைவி யாரையும் அவதூறு வழக்குகள் துரத்துகின்றன.
ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாம்.

திருவள்ளூரில் நடராஜ் என்பவரின் ஜவுளி கடை யை உடைத்து னீ9 லட்சம் கொள்ளை.ஈஞ்சம்பாக்கம் பகுதி யில் 5 கடைகளை உடைத்து னீ1.5 லட்சம் கொள்ளை.தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தொடர் மறியல் போராட்டம்.மணல் திருட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் சி.பி.ஐ. விசாரணைக்குஉத்தரவிட்டு, அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.

திருச்சியில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பா.ஜ மாநாடு பேனர்கள் 50க்கு மேற்பட்ட இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளன.

கும்மிடிப்பூண்டி அருகே னீ50 லட்சம் நில மோசடி.

மத்திய அமைச்சர் பெயரை சொல்லி வேலை வாங்கித் தருவதாக னீ33 லட்சம் மோசடி.

துரைப்பாக்கத்தில் பன்சேகர் என்ற ரவுடி மது அருந்தி ரகளை செய்ததால் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அவரது உறவினரான தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் விருகை ரவி ஆதரவாளர்களுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பன்சேகரை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

இதுதான் காவல் துறையினருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட லட்சணம்.

சேலம் சிறையில் சுகுமார் என்ற கைதி இறந்த விவகாரத்தில்
அமைச்சர்கள் மீது கொலை வழக்கு மனு விசாரணை தள்ளிவைப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு.

காட்பாடி அருகே வீடு மீது குண்டு வீச்சு 3 பேர் தலைமறைவு.
பேனர் கிழிப்பால் மோதல் கடலூரில் கடைகள் அடைப்பு.

திருப்பரங்குன்றம் தேமுதிக எம்எல்ஏ கைது, மனைவி தலைமறைவு.
பொன்னேரி காவல் நிலையத்தில் ஆர்த்தி என்ற பெண் தீக்குளிக்க முயற்சி.

எர்ணாவூரில் கழுத்தை நெரித்து மனைவி நதியா கொலை.
& ஒரே நாளில் ஏடுகள் சிலவற்றில் வெளிவந்த தலைப்பு செய்திகள்தான் இவை. ஒவ்வொரு நாளும் இதே நிலைதான். இதெல்லாம் நாட்டின் தலைநகரத்தில் யாருக்கு தெரியப்போகிறது என்ற எண்ணத்தோடுதான் ‘தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது; அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ என்று முதல்வர் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் உரையில் சிறுபான்மையினர் நல இயக்ககம் பற்றியும் பெரிதாகக் கூறியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியாக ஓர் இயக்குனரகம் முதலில் 1969ல் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியே ஓர் அமைச்சரை நியமித்ததும், அதற்கென மானியக் கோரிக்கை அறிமுகப்படுத்தியதும் 1971ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான்.

அதைப்போலவே சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்கு அரசின் தனிக்கவனம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்கென ஒரு தனி இயக்குனரகம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு அறிவித்த தற்கிணங்க, சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்திட அனுமதித்து 2007ல் ஆணையிடப் பட்டது.

இவ்வளவையும் மறைத்துவிட்டு, முதல்வர் உரையில், சிறுபான்மையினரின் நலன்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறியிருப்பது எவ்வளவு தவறானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

செடிகொடிகள் சாய்ந்து, காய்ந்து, மரங்களனைத்தும் பட்டுப் போய், வேலி உடைந்து, கொலைகாரர்களும், கூலிப்படையினரும், கொள்ளைக்காரர்களும் குடியேறி, பாம்புகளும், பூரான்களும், தேள்களும் நெளிந்திடும் பூங்காவை, அமைதிப் பூங்கா என்றால், நம்புவதற்கு நாமென்ன நனவிழந்து விட்டோமா? கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
.