கூகுள் சர்ச்சில் அதிகம் முறை தேடப்பட்ட வார்த்தை – பக்கோடா! – AanthaiReporter.Com

கூகுள் சர்ச்சில் அதிகம் முறை தேடப்பட்ட வார்த்தை – பக்கோடா!

கூகுளில் ‘பக்கோடா’ என்ற வார்த்தை இந்திய அளவில் அதிக முறை தேடப்பட்டுள்ளது. அதிலும் ‘பக்கோடா’ என்ற வார்த்தையை அதிகம் முறை தேடியதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ,கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “சாலையில் பக்கோடா விற்பவர் கூட ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிக்கிறார்”என்று கூறினார். ரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாணவர்களும் இளைஞர்களும் சாலையில் பொதுமக்களிடம் பகோடா விற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றன.

சமூக வலைதளங்களிலும் பக்கோடா, பக்கோடானாமிக்ஸ் போன்ற ஹாஷ்டாகுகள் உருவாக்கப்பட்டு ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை பக்கோடா என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் பக்கோடா என்ற வார்த்தையை அதிகம் தேடியது தமிழகம்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.