குறும்படம் ‘பாபு’…..! -வீடியோ – AanthaiReporter.Com

குறும்படம் ‘பாபு’…..! -வீடியோ

முகநூல் நண்பர் வசந்த குமார் இயக்கித் தயாரித்த குறும் படம். சுமார் 15 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் அனைவரையும் ஒரு தாக்கத்திற்குட்படுத்தியது என்றால் அது வியப்பல்ல.
babu shrt film
படத்தை விமர்சிப்பதற்கு முன் ஒரு சில வார்த்தைகளைக் கூற கடமைப் பட்டிருக்கிறேன்.

1. ரூ 15000 மட்டுமே செலவு செய்து இப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இது போல குறும்படங்கள் சிறிதளவே செலவிட்டு எடுக்க முடியும் என்று நிரூபித்து மற்ற கலைத் தாகம் உள்ளவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இப்படத்தைக் கொடுத்த வசந்தகுமாருக்கு, இனி வரும் காலங்களில் குறும்படக் கலைஞர்கள் நன்றி கூற வேண்டும்.

2. இதில் நடித்தவர்களும். பின்புலத்தில் பணி புரிந்த அனைவரும், முக நூல் நண்பர் வட்டத்தில் உள்ளவர்கள் என்பது மிகப் பெருமைக்குரிய விஷயம். அதற்கும் எனது பாராட்டுக்கள்.

3.15 நிமிடத்தில் பிரச்சினையைச் சொல்லி அதற்கு ஒரு தீர்வும் சொல்லப் பட்டதற்கு எனது பாராட்டுக்கள். நடித்தவர்கள் அனைவரும் திறமையாகச் செயதிருக்கிறார்கள். மிகைப் படுத்தப் படவில்லை என்பதே மிகப் பெரிய பாராட்டுக்கரிய அம்சம்.மேலும் மேலும் இது வளரட்டும். அப்படத்தின் யூ ட்யூப் லிங்க் இதோ:

டிமிடித் பெட்கோவ்ஸ்கி