காரைக்குடி – ஆவின் நிறுவனத்தில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

காரைக்குடி – ஆவின் நிறுவனத்தில் ஜாப் ரெடி!

தமிழகத்தின் பால் மற்றும் பால் தொடர்புடைய உபபொருட்கள் உற்பத்தி மற்றும் பங்கீட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஆவின் நிறுவனம் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனத்தின் காரைக்குடி கிளையில் பல்வேறு பிரிவுகளில் 24 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் :

வெர்டினரி மேனேஜரில் 3, டெய்ரி பிரிவிலான டெபுடி மேனேஜரில் 1, கிரேடு III பிரிவிலான பிரைவேட் செக்ரட்டரியில் 1, கிரேடு II பிரிவிலான எக்ஸ்டென்ஷன் ஆபிசரில் 2, சீனியர் பேக்டரி அசிஸ்டெண்டில் 17ம் சேர்த்து மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி

வெர்டினரி மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இப்பிரிவில் பட்டப் படிப்பும் இதற்குப் பின்னர் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதும் தேவை. டெய்ரி டெபுடி மேனேஜர் பதவிக்கு இதே பிரிவில் பட்டப் படிப்பு அல்லது டெய்ரி சயின்சில் முது நிலை பட்டப்படிப்பு அல்லது பி.டெக்.,கில் புட் டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி படிப்பு தேவைப்படும். பிரைவேட் செக்ரட்டரி பதவிக்கு பட்டப் படிப்புடன் ஆங்கிலம், தமிழ் டைப்பிங் தகுதி தேவை. எக்ஸ்டென்ஷன் ஆபிசர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கோ-ஆப்பரேட்டிவ் படிப்பு தேவைப்படும். சீனியர் பேக்டரி அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2 படிப்பு அல்லது ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
General Manager, Sivagangai District Cooperative Milk Producers’ Union Limited, “O”. Siruvayal Road, Kalanivasal, Karaikudi. PIN:630 002

கடைசி நாள் : 2017 நவ., 22.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு