காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை! – AanthaiReporter.Com

காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளன.வாத்ஸாயன‌னின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
kamasutra3d-19
ரூபேஷ் பால் இயக்கியிருக்கும் படம் ’காமசூத்ரா 3டி’. இதில் பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும் மலையாள நடிகர் சலீம் குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தில் செர்லின் சோப்ராவுக்கான அழகிய ஆடைகளை ஸ்பெஷலாய் வடிவமைத்திருக்கிறார் நீதா லல்லா. இவர் ‘ஜோதா அக்பர்’, ‘தேவ்தாஸ்’ படங்களுக்காகத் தேசிய விருதினை வென்றவர்.

படத்திற்கான பாடல்களை இயக்குனர் ரூபேஷ் பால், பிரத்தியூஷ் பிரகாஷ் ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும் படத்தின் பாடல்களுக்கு சென்னையைச் சேர்ந்த சச்சின் – ஸ்ரீஜித் ஆகியோர் இசையமைத்து இருக்கிறார்கள். இந்நிலையில் காமசூத்ரா 3டி படத்தின் ஐந்து பாடல்கள் உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனவாம்!

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற ஜனவரி 16-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது என்பது நினைவுகூற்த்தக்க்து .