கராச்சி ஏர்போர்ட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் 23 பேர் பலி! – AanthaiReporter.Com

கராச்சி ஏர்போர்ட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் 23 பேர் பலி!

கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்பு வீரர்களை போன்று உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் கொடூர தாக்குல் நடத்தினர். இதில் ஏராளமான் பாதுகாப்புபடைவீரர்கள் பலியாகியுள்ளனர். இத்தாக்குதலை அடுத்து, விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் சீல் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் கராச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
karachi airport
ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் போலியான அடையாள அட்டையை காட்டி தீவீரவாதிகள் உள்ளே சென்றுள்ளனர்.அந்த பழைய முனையத்தை கைப்பற்றி தாக்குதல் நடத்தியதாகவும் விமான நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விடிய விடிய நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 23 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்க்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிகிறது. தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து கராச்சி விமான நிலையத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலையடுத்து கராச்சி சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பாகிஸ்தானில் உச்சகட்ட உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.