ஓரினச் சேர்க்கையாளர்கள் டெல்லியில் பேரணி – AanthaiReporter.Com

ஓரினச் சேர்க்கையாளர்கள் டெல்லியில் பேரணி

இந்தியாவில் 25 லட்சம் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் இதில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் உள்ளனர் என்றும் குஜராத், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த இடத்தை வகிக்கின்றன எனவும் கடந்த ஆண்டே சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறி இருந்தது நினைவிருக்கும்,
nov 25 -India Gay Parade.
இதற்கிடையில் இந்திய சட்டங்களின்படி, ஓரினச்சேர்க்கை என்பது 10 ஆண்டு சிறைவாசத்திற்குரிய கடும்குற்றமாக முன்னர் கருதப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லி உயர்நீதி மன்றம் கடந்த 2009-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையில் தவறில்லை என தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் முறை நம் நாட்டின் பல பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே ஆகி விட்டது.

இருந்த போதிலும் இந்த சமூகத்தில் தங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆண் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அங்கலாய்ந்து வருகின்றனர்.

இதையடுத்து தங்களுக்கு மறுக்கப்பட்டு வரும் சமஉரிமைய நிலைநாட்டவும், இந்த சமூகம் தங்களை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தலைநகர் டெல்லியில் நேற்று நூற்றுக் கணக்கான ஆண்-பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி நடத்தினர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் வானவில்லின் நிறங்களை கொண்ட கொடிகளை ஏந்தி, மேளதாளம் முழங்க சென்ற அவர்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian gays demand an end to discrimination
************************************************************
Gay rights activists sang songs and carried rainbow-colored flags while marching to the beat of traditional Indian drums Sunday, as they paraded through India’s capital to demand an end to the stigmatization of gays in the deeply conservative country.

.