ஒலகம் முழுக்க ரிலீஸாகப் போகும் புலி திரைப்பட புது டிரைலர்! – AanthaiReporter.Com

ஒலகம் முழுக்க ரிலீஸாகப் போகும் புலி திரைப்பட புது டிரைலர்!

விஜய்யின் ‘புலி’ வெளிவர இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதற்குள் எத்தனை எத்தனை கற்பனை செய்திகள் வர காத்திருக்கிறதோ தெரியவில்லை. விஜய்யின் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக இப்படம் உருவாக் கப் பட்டுள்ளதாம். படத்தை போலவே வெளியீடும் மிகப் பிரம்மாண்டாக நடைபெற வுள்ளதாகவும். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. .
puli sep 23
தற்போது வந்துள்ள புது செய்திப்படி இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் நிறைய அரங்குகளில் வெளியாகவுள்ளதாம். குறிப்பாக நியூசிலாந்து நாட்டில் தலைநகர் வெல்லிங்டன், ஹாக்லாந்து, ஹாமில்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய நான்கு நகரங்களில் ரிலீஸாகவுள்ளது. அனைத்து நகரங்களிலும் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியாகவுள்ளதாம். இதற்கு முன் ஷங்கரின் ‘ஐ’ படம் மட்டுமே இப்படி வெளியானது.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் 35 திரையரங்குகள், ஜெர்மனியில் 4 திரையரங்கு கள், டென்மார்க்கில் 18 திரையரங்குகள், ஹாலந்தில் 8 திரையரங்குகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் 16 திரையரங்களில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் மட்டும் 55க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இன்னும் வெளியீட்டிற்கு நாட்கள் உள்ளதால் இந்த எண்ணிக்கை கூட வாய்ப்புள் ளதாகவும் கூறப்படுகிறது. ஹூம்.. இதெல்லாம் உண்மையா என்றுதான் தெரியவில்லை!

இந்நிலையில் புலி படத்தில் புது டிரைலர் வெளியாகியுள்ளது. அது இதோ: