ஏர்டெல் நிறுவனத்தின் தகிடுதத்தம்!- டிராய் கண்டிப்பு! – AanthaiReporter.Com

ஏர்டெல் நிறுவனத்தின் தகிடுதத்தம்!- டிராய் கண்டிப்பு!

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்படி மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு உள்ளன.

ஏர்டெல் நிறுவனம் சிம் கார்டுகளுக்கு வழங்கப்படும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களது பெயரில் மின்னணு வங்கி கணக்குகளை தொடங்கி இருப்பதாக புகார் எழுந்தது

இதன் மூலம் சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட மானியங்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படாமல் அவர்களுக்கு தெரியாம லேயே ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதன்படி சுமார் ரூ.190 கோடியை ஏர்டெல் வரவு வைத்ததாக கூறப்படுகிறது

இதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில் ஆதார் ஆணையம் விசாரணை நடத்தியது. பின்னர், ஏர்டெல் நிறுவனத்தின் இ-கேஒய்சி உரிமத்தை தற்காலிகமாக இடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது

இந்தநிலையில் சமையல் எரிவாயு மானியமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் செலுத்தப்பட்டு ஏர்டெல் தனது கணக்கில் வரவு வைத்துள்ள தொகையை மீண்டும் வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு உள்ளன