இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்! – AanthaiReporter.Com

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!

சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார்.
jan 6 - Ilayaraja-
இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார்.

தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந்திப்படத்துக்கும் இசையமைக்கப்போவதாக நிருபர்களிடம் இளையராஜா தெரிவித்தார்.