இளையராஜாவுக்கு நெஞ்சு வலி: ஆஸ்பத்திரியில் அனுமதி: – AanthaiReporter.Com

இளையராஜாவுக்கு நெஞ்சு வலி: ஆஸ்பத்திரியில் அனுமதி:

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை பரிசோதித்த நிலையில் விரைவில் அவருக்கு ஆஞ்சியோ ஆப்ரேஷன் நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
ilararaja 23
அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த நிலையில் விரைவில் அவருக்கு ஆஞ்சியோ ஆப்ரேஷன் நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது பல நாட்களுக்கு முன்னரே செய்யப்பட வேண்டியது எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிகிறது.