இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! – AanthaiReporter.Com

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

உடல் நலம் சரியில்லாமல் கடந்த இரு வரு­டங்­க­ளாக கோமா நிலையில் இருந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு திரு­மணம் செய்து
வைக்­கப்­பட்டு அது முடிந்த சில மணி நேரங்ங்­களில்,அவ­ரது உயிரைக் காப்­பாற்றப் பொருத்­தப்­பட்­டி­ருந்த உயிர் காப்பு உப­க­ர­ணங்கள் நிறுத்­தப்­பட்டு அவர் மர­ணத்தை தழு­விய மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­ பெற்­றுள்­ளது.
sep 24 - lady coma
தென்­கி­ழக்கு சீனாவில் குவாங்டொங் எனும் இடத்தை சேர்ந்த ஹீ ஜிங்ஜிங் என்ற மேற்­படி பெண்­ணுக்கும் லு லாய் என்ற அவ­ரது காத­ல­ருக்கும் 2011ஆம் ஆண்டில் திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு நிச்­ச­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் ஒரு நாள் வேலைக்குச் சென்ற ஜிங்ஜிங் திடீ­ரென உடம் நலமின்றி போய் கோமா நிலைக்கு உள்­ளாகி விட்டார். மேலும் கடந்த இரு வரு­டங்­க­ளாக மீளாத கோமா நிலையில் உயிர்­காப்பு உப­க­ர­ணங்­களின் உத­வி­யு­ட­னேயே அவர் உயிர் வாழ்ந்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் ஜிங்­ஜிங்கின் 28ஆவது பிறந்த நாளில் அவ­ருக்கு அவ­ரது காத­ல­ரான லு லாயை திரு­மணம் செய்து வைத்த பின் அவரது உயிர் காப்பு உபகரணங்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. திட்டமிட்டபடி மருத்­து­வ­ம­னையில் படுத்த படுக்­கை­யாக சுய உணர்வு இன்றி இருந்த ஜிங்­ஜிங்கை லு லாய் திரு­மணம் செய்தார். இந்த திரு­ம­ணத்தின் ஓர் அங்­க­மாக பிறந்தநாள் கேக்கும் வெட்­டப்­பட்­டது.

இது குறித்து லு லாய் விவரிக்­கையில், ”நாங்கள் எமது திரு­ம­ணத்தை விமர்­சை­யாக நடத்த திட்­ட­மிட்­டி­ருந்தோம். அதற்கு பணம் தேவைப்­பட்­டது. அதனால் அலு­வ­ல­கத்தில் அதிக நேரம் பணி­யாற்ற வேண்­டி­யி­ருந்­தது. அள­வுக்­க­தி­க­மான வேலைப் பளு கார­ண­மாக ஜிங்ஜிங் சுக­வீ­ன­ம­டைந்தாள். அவள் சுக­வீ­ன­ம­டைந்த நிலை­யிலும் வேலைக்கு செல்­வதை நிறுத்­த­வில்லை. இறு­தியில் அவள் தனது கண­ணியில் வேலை செய்து கொண்­டி­ருந்த வேளை மயங்கி விழுந்தாள் . அந்த மயக்கம் கடைசி வரை நீங்கவில்லை. அவள் எனது இதயத்தில் எப்போதும் வாழ்கிறாள்” என்று கூறினார். இதற்கிடையில் மரணமான ஜிங்ஜிங்கின் உடல் உறுப்புக்கள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

World’s most tragic bride is married after two years in a coma before family turn off her life support
****************************************************************************************************************
A woman who spent two years in a coma was bid a heartbreaking farewell by loved ones, who switched off her life-support machine just hours after she was married.He Jingjing and her fiance Lu Lai, of Guangdong in southeast China, had the world at their feet in 2011.Both had found top jobs in the local government at Guangzhou, they had recently bought a home and were planning to get married.