இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்! – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு! – AanthaiReporter.Com

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்! – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு!

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் நாடு முழுவதும் வழக்கமாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த ஆண்டு 25 ஆண்டு தினம் என்பதால் இருதரப்பினரும் ஆர்ப்பாட்டம் , தர்ணா நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படியும், இந்த ஆண்டு பாதுகாப்பை பலப்படுத்தி உஷார் நடவடிக்கைகள் எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் அமைதியை உறுதி செய்யவும், எந்த ஒரு பகுதியிலும் மதவாத பதட்டம் இல்லாத நிலையை உறுதி செய்ய போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படியும், அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளை முறியடிக்கவேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.