இந்திய போஸ்டல் டிப்பார்ட்மெண்டோ ட பார்சல் சர்வீ ஸ் பக்காவாகப் போகுது – AanthaiReporter.Com

இந்திய போஸ்டல் டிப்பார்ட்மெண்டோ ட பார்சல் சர்வீ ஸ் பக்காவாகப் போகுது

நம்ம இந்தியாவில் தினந்தோறும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரங்களில் உள்ள மக்களில் 45 சதவிதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய இ காமர்ஸ் துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
postal feb 7
இதனிடையில் இந்திய தபால்துறையை பொறுத்த வரை அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா, ஸ்நாப்டீல், பேடிஎம், ஷாப் குளூஸ், யெப்மீ, நாப்டூல், டெலி பிராண்ட்ஸ் மற்றும் ஹோம் ஷாப் 18 உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு பார்சல் டெலிவரி சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், விரைவில் இந்த சேவையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதாவது பார்சல் டெலிவரியை துல்லியமாகவும், வேகமாகவும் மாற்ற இந்திய தபால்துறை. தகவல் தொழில்நுட்பம் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்கள் இணைக்கப்பட உள்ளது. முக்கிய பெருநகரங்களில் இந்திய தபால்துறைக்கு சொந்தமான டெலிவரி வாகனங்களில் ஜி.பி.எஸ் வசதி பொருத்தப்பட உள்ளது. மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் நவீனமயமாக்கப்பட்ட மெயில் பிராசசிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதேபோல், அதிக எண்ணிக்கையிலான பார்சல்களை திறமையாக கையாளும் விதமாக கன்வேயர் பெல்ட், செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நவீன கருவிகளும் அனைத்து போஸ்ட் சென்டர்களிலும் நிறுவப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு 40 லட்சம் பார்சல்களை திறமையாக கையாளும் அளவுக்கு இந்த வசதிகள் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, 2015-16 முதல் 2019-20 வரை ரூ.322 கோடியை இந்திய தபால்துறை முதலீடு செய்கிறது. பார்சல் டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்வதன் மூலம் ரூ.1,608 கோடியை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.