ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் குற்றவாளிகள் -சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – AanthaiReporter.Com

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் குற்றவாளிகள் -சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமி ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.இருவருக்குமான தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள தாஸ்னா சிறைச்சாலைக்கு அடைக்கபட்டனர்.
nov 25 -aarush murder
நொய்டாவை சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நுஹூர் தல்வாரின் 14 வயதுடைய மகள் ஆருஷி கடந்த 2008ஆம் ஆண்டு தனது படுக்கை அறையில் இறந்து கிடந்தார். அதன் மறுநாள் வீட்டு வேலைக்காரர் ஹேவ்ராஜ் என்பவரின் உடல் மாடியில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆருஷியின் தந்தை, தாய் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் சிறுமி ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோரை தல்வார் தம்பதியரே கொலை செய்தனர் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்த
இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தல்வார் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று தல்வார் தம்பதியினர் தெரிவித்துள்ளனராம்.

Rajesh & Nupur Talwar found guilty of killing Aarushi & Hemraj
**************************************************************
A special CBI court on Monday pronounced Rajesh and Nupur Talwar as guilty in the Aarushi Talwar murder case. The verdict comes nearly five-and-a-half years after the sensational killings of teenager Aarushi Talwar and domestic help Hemraj.