ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை – AanthaiReporter.Com

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
nov 26 -aarush
டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு பல டாக்டர் தம்பதியான டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான பதினான்கு வயது ஆருஷி வீட்டில் அவரது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மறுநாள் ஹேமராஜ் பிணமும் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தியா தலைநகரில் நடந்த இந்த இரட்டைக் கொலை வழக்கில் முதல் கட்ட விசாரணையில் துப்பு கிடைக்காமல் தொய்வு ஏற்பட்ட நிலையில் வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்து விசாரித்து வந்தது. அதில் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி அருண்குமார் உட்பட 14 சாட்சிகளை விசாரிக்க ராஜேஸ் மற்றும் நுபுர் தல்வார் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடந்த சி.பி.ஐ விசாரணையில் ஆருஷியையும் ஹேம்ராஜையும் கொன்றது,பல் மருத்துவர்களான ஆருஷியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர்தான் என்று முடிவுக்கு வந்து அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

2012-ம் ஆண்டு மே மாதம், ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் சதித்திட்டம் தீட்டி இந்த கொலைகளை செய்து அதன் சாட்சியங்களை அழித்துள்ளனர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.மேலும் 2013 ஏப்ரல் மாதம், ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் இருவரும் படுக்கை அறையில் தகாத முறையில் காணப்பட்டதையடுத்து அவர்கள் இருவரையும் தல்வார் ஜோடி கொன்றனர் என்று சி.பி.ஐ. உறுதிபடக் கூறியது.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், ஆருஷியின் பெற்றோர் தான் குற்றவாளிகள் என்று காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி நேற்று அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி தண்டனை குறித்து அறிவிப்பது தொடர்பான வாதம் இன்று காலை நடைபெற்றது. அப்போது கொடூரமாக இரண்டு கொலைகளைச் செய்த ஆருஷியின் பெற்றோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஆருஷியின் பெற்றோர் மேல் முறையீடு செய்ய உள்ளனராம்.

Rajesh Talwar and Nupur get life term for killing Aarushi and Hemraj
******************************************************************
Dr Rajesh and Nupur Talwar have been sentenced to life imprisonment for killing their 14-year-old daughter Aarushi and domestic help Hemraj Banjade. The special Central Bureau of Investigation (CBI) court at Ghaziabad in Uttar Pradesh sentenced Rajesh and Nupur on Tuesday in the five-and-a-half year old gruesome twin murder case.