ஆக்சிடென்டை அவாய்ட் பண்ணச் செய்யும் ஹைடெக்கான 3டி பெயிண்டிங்! – AanthaiReporter.Com

ஆக்சிடென்டை அவாய்ட் பண்ணச் செய்யும் ஹைடெக்கான 3டி பெயிண்டிங்!

உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் நம்ம இந்தியாவில்தான் சாலை விபத்துக்களால் அதிக மக்கள் பலியாகின்றனர். சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்களில் 1.3 லட்சம் மக்கள் பலியாகின்றனர். 2014ம் ஆண்டில் தமிழகத்தில் அதிகபட்சமாக 67250 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.அதனை தொடர்ந்து மகா ராஷ்டிராவில் 61,627 விபத்துக்களும், மத்திய பிரதேசத்தில் 53,472 விபத்துக்களும் நடந்துள்ளன. சாலை விபத்துக் களை தடுப்பதற்காக, மோசமான சாலை வடிவமைப்புக்கு காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
gijarat 3D-zebra-crossing-1
இந்நிலையில் ஓட்டுநரின் கவனக் குறைவால் குழந்தைகள், குறிப்பாக பள்ளியை கடக்கும் போதுதான் இந்த விபத் துக்கள் பெரும்பாலும் அரங்கேறுகிறது என்று கண்ணித்து. இதை தடுக்க குஜராத்தைச் சேர்ந்த இளம் பெண்களன சௌமியா பண்டியா தக்கர் மற்றும் சகுந்தலா பண்டியா காயத்ரி ஆகியோர் ஒரு புதுமையான ஐடியா செய்துள்ள னர்.

அதாவது நடைபாதையினர் சாலையை கடக்க பயன்படுத்தும் வரிக்குதிரை சாலை கடப்பில், 3டி எனும் முப்பரி மாண ஒரு புதுமையான பெயிண்டிங்கை செய்துள்ளனர்.

அதாவது இந்த முப்பரிமாண வரிக்குதிரை அமைப்பு, அதை கடக்கும் மக்களுக்கு சாதாரண வரிக்குதிரை கோடு களாகதான் தெரியும். ஆனால் சாலையில் வரும் வாகன ஓட்டுநர்களின் பார்வையில் பார்த்தால், அது சாலை பிளாக் போல தெரியும். அதனால் ஓட்டுநர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்வார். இதனால் விபத்து தடுக்கப் படும் என்று நம்பலாம். இதுபோன்ற பெயிண்டிங், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அருகே குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 90% விபத்துகள் தடுக்கப்படுமாம்!