’அனுஷ்காவின் ருத்ரமாதேவி! ஆல்பம் + டிரைலர் – AanthaiReporter.Com

’அனுஷ்காவின் ருத்ரமாதேவி! ஆல்பம் + டிரைலர்

தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம் ருத்ரமாதேவி. இதில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், சுமன், விஜயகுமார், சேத்தரின் தேரெசா, ஹம்சாநந்தினி, அதிதி செங்கப்பா ஆகியோர் நடிக்கின்றனர்.பதிமூன்றாம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் தன்னிகரில்லா அரசியாக நாட்டை ஆண்ட ருத்ரமா தேவியின் வாழ்க்கை கதையாக இப்படம் தயாராகிறது. இதில் ருத்ரமாதேவியாக அரசி வேடத்தில் அனுஷ்கா வருகிறார்.

ஒரிசாவில் ஆயிரம் ஏக்கர் நில பரப்பில் போர்க்கள காட்சிகள் படமாகியுள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை, தர்பார் பிரமாண்ட கோவில்கள் பெரிய கடை வீதி குளம் என பதினாறுக்கும் மேற்பட்ட அரங்குகளை தோட்டா தரணி அமைத்து கொடுக்க படமாகியுள்ளது.

முழுக்க ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் 3டியில் இப்படம் தயாராகிறது. நூற்றுக்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் பல கோடி செலவில் உருவாகிறது.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி குணசேகர் இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி தயாரித்துள்ளார்.

இசை: இளையராஜா,