சீனா விமானப்படையில் குரங்குகள் பட்டாளம்!

சீனா விமானப்படையில் குரங்குகள் பட்டாளம்!

நம் தமிழகத்திலுள்ள ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகள் போடும் உணவு பண்டங்களை திண்பதற்காக குவிந்து கிடக்கும் குரங்கு கூட்டத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றும் அதிலும் கோடை வெயில் கொளுத்துவதால் தண்ணீரின்றி குரங்குகள் சுருண்டு விழுவதை வனத்துறைக் கண்டும் காணாதது போலிருக்கிறது என்ற செய்தி வெளியான அதே சமயம் சீனா விமானப்படையில் குரங்குகள் பட்டாளம் ஒன்றையே உருவாக்கியுள்ளது என்ற நியூசும் வெளி வந்துள்ளது
monkey in army
பெய்ஜிங் அருகே உள்ள விமான தளத்தை பாதுகாக்க உதவ இத்தகைய விமானப்படை குரங்குகள் குழுவுக்கு பயிற்சி கொடுத்து வைத்துள்ளது. அதிலும் பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கவனித்து கொள்ள குரங்குகள் வைக்கப்பட்டுள்ளனவாம்.

இது தொடர்பாக சீனா விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், குரங்குகள் அருகில் உள்ள மரங்களில் உள்ள கூடுகளை அழிக்க கற்று வருகின்றன. விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும்போது, மேலே செல்லும் போதும் தொல்லை ஏற்படுத்தும் பறவைகளை துறத்த குரங்குகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் பல நடவடிக்கைகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை இந்த நிலையில் சீனா ராணுவம் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

Related Posts

error: Content is protected !!